Uncategorized

பெண்

பெண் தாயாக அறிமுகமாகி, தோழியாக உரையாடி,சகோதரியாக அன்பை கொடுத்து,மனைவியாக பாதியாகி ஏதோ ஓர் வடிவில் ஒவ்வொரு ஆணும் பெண்ணை சாராமல் இல்லை.ஆனால் அப்படியான பெண் தனக்கு உண்டான திறமை தெரிந்தோ அல்லது தெரிந்து கொள்ள நினைக்காமலோ தனக்குள் ஒரு பூட்டை பூட்டி கொண்டுள்ளனர்.ஆண் என்பவன் என்றுமே உன்னை கட்டுப்படுத்த நினைக்கவில்லை,நினைத்தாலும் அது முடியாது.என் சிந்தனைக்கு உட்பட்டவரை பல ஆண்கள் பெண்ணுக்கான சுதந்திரத்தை பறிக்க யோசிக்கவில்லை.உன் எண்ணமே உன்னை பூட்டி வைத்துள்ளது.அந்த பூட்டிற்கான சாவி உன்னிடம் மட்டுமே உள்ளது.அதை… Continue reading பெண்

Advertisements
Uncategorized

நம்பிக்கை

பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை, பள்ளியிலிருந்து வெளியே அனுப்பியதால் அவமானம் தாங்காமல் தற்கொலை இப்படி அடிக்கடி ஏதேனும் ஒரு செய்தியை படித்து விட்டு கடந்து செல்கின்றோம்.அவமானங்களும் தோல்விகளும் முன்னேற்றத்தின் பாதை என்பது புரியவில்லையா அல்லது நாம் புரியவைக்கவில்லையா? நம் கனவுகளை நம் தலைமுறையினர் மீது திணிக்கும் நாம், நம் நம்பிக்கையை ஏன் கற்பிப்பதில்லை.உங்கள் மகன் படிக்க தகுதியற்றவன் என்று ஆசிரியர் எழுதியதை மறைத்து, அங்கு உன் அறிவிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இல்லை என்று… Continue reading நம்பிக்கை

home, Uncategorized

தூக்கமில்லா ஓர் இரவில்

https://amzn.to/2NxJmbY அன்று ஒருநாள் இரவு தூக்கம் ஏனோ வரவில்லை,சரி சிறிது தூரம் நடந்து விட்டு வரலாம் என்று தூங்கி கொண்டிருந்த என் மனைவியை ஏதும் தொந்தரவு செய்யாமல் வீட்டில் இருந்து அமைதியாக வெளியே கிளம்பினேன்.பகல் பொழுதில் சாலையை கடக்க விடாமல் விரைந்து செல்லும் வாகனங்கள் ஏதும் இன்றி அமைதியாக சாலை காணப்பட்டது. அந்த நேரத்திலும் வாழ்க்கையை துரத்தி கொண்டு செல்லும் ஒரு சிலரின் வாகனங்கள் என்னை கடந்து போக கண்டேன்.அப்படியே பார்வையை அலைய விட்ட படி நடந்து… Continue reading தூக்கமில்லா ஓர் இரவில்